Wednesday, August 28, 2013

ஹிந்து மதமும் நாங்களும்

தலைப்பை பார்த்தவுடன் இதிகாசமும் வரலாறும் ஆராயிந்து எழுதுதியது என்று யாரும் நினைத்தால் நான் பொறுப்பு அல்ல நடைமுறை மனித எண்ணத்தில் இருக்கும் நடைமுறையை தனிப்பட்ட முறையுலும் சமுக வலைதளங்களில் நடக்கும் சண்டைகளையும் வைத்து என்னால் முடிந்ததை எழுதுகிறேன்

நான் திருடன் இல்லை அதில் என் பெயரை சேர்த்துவிட்டார்கள் என்று ஒரு நிரபாரதி அவனுக்கும் அந்த திருட்டும்கும் சம்பந்தம் இல்லை எவ்வாறு பழி வாங்கினார்கள் என்பதை குற்றதை சுமந்தவன் தான் அந்த நிகழ்வை பற்றி பேசமுடியும் அதற்காக போராட முடியும் அதை அதான் நாங்கள் இன்று செய்துகொண்டு இருக்கிறோம்  நாங்கள் ஹிந்து இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் அதனாலே ஹிந்துவை  அதிகமா விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது அதை பார்த்துதான் ஹிந்து வெறியர்கள் (அவர்கள் வெறியர்களும் அல்ல ஆரியனின் அடிமைகள் என்றுதான் சொல்ல வேண்டும் ) நம்மை பார்த்து வழக்கமான கேள்வியை வைக்கிறார்கள் எங்கே இஸ்லாமியரை பார்த்து இப்படி பேசுங்க ,கிருத்துவனை பார்த்து இப்படி கேளுங்க ,,என்று நம் மீது வழக்கமான கேள்விகளை தொடுக்கிறார்கள் (அடுத்த முறையாவது கேள்வியை மாத்துங்க ) இது போன்ற வழக்கமான கேள்விகளை கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிகொள்கிறேன் எனது அரசாங்க ஆவணத்தில் இஸ்லாம் என்று இல்லை கிருத்துவன் என்று இல்லைஆனால் ஹிந்து என்று திணிக்க பட்டுள்ளது அந்த திணிப்பை கிருத்துவனும் இஸ்லாமியனும் செய்திருந்தாலும் இன்றைய ஹிந்துவை எப்படி விமர்சனம் செய்கிறமோ அதே தான் மற்ற மதத்திற்கும் செய்திருப்போம் (இருந்தாலும் மற்ற மதத்தில் இருக்கும்தவறுக்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்துகொண்டுதான் இருக்குறோம் அது வேற விசியம் அத விடுங்க )


எப்படி எங்களை தமிழ் மக்களை ஹிந்துவில் கோர்த்து விட்டார்கள் என்று நினைக்கும் போது ஒட்டு மொத்த எரிமலையும் நம் மனதுக்குள் வெடிக்கிறது
யார்லாம் இஸ்லாம் இல்லையோ ,யார்லாம் கிருத்துவன் இல்லையோ ,யார்லாம் பௌத்தன் இல்லையோ ,யார்லாம் சீக்கியன் இல்லையோ அவன்லாம் ஹிந்து என்று பொய் பரப்புரையில் மதமே இல்லாத நாங்கள் மதம் என்னும் மாய வலை என்று தெரியாமல் விழுந்தோம் மதம் என்னும் சவக்குழியில் வலுகட்டயமா  தள்ளி விட்டிர்கள் அத சவ குழி என்று  தெரியாமலும் அதற்கு முக்கியத்துவமும் கொடுக்காமல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் எதிர்த்துருபார்கள் எங்கள் முப்பாட்டன்கள் சிந்திக்க வில்லை சிந்திக்கவும் விட வில்லை அது சவ குழி என்று தெரிந்தவன் எழுந்திருக்க முற்பட்டால் அவனை விமர்சனம் என்ற பெயரில் அவன் மீது விஷத்தை கக்குரிர்கள் , மதத்தை வைத்து நீ சாதித்தது என்ன என்று கேட்டால் இது வரை பதில் இல்லை .இந்துவா இருக்குறவன் வேற  மதம் மாறுகிறான் அவனை நினைத்து பெருமை பட வேண்டும் என்று நினைக்கிறேன் ஹிந்து மதத்தில் எப்படி எப்போது நாம் வந்தோம் யாரால் நாம் வந்தோம் என்று கூட தெரியாமல் ஒரு மதத்தில் இருப்பதை விட விவரம் தெரிந்து ஹிந்துமததில் இருக்கும் மூட நம்பிக்கை ,பார்பனனை தவிர வேற ஒருத்தனுக்கும் மரியாதை இல்லாதது போன்ற கொடுமைகளை கண்டு அவனுக்கு பிடித்த மதத்தில் அவன் இணைகிறான் என்றால் அவனை நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும்


ஹிந்து மதத்தில் பார்பனர்கள் அல்லாதவர்களை ஒரு மனிதனா நினைத்ததுண்டா அப்போ அந்த மததிற்கு ஹிந்து என்று பெயரை நீக்கி விட்டு பார்பன மதம் என்று வைத்தால்தான் பொருந்தும் தமிழ்நாட்டை பொறுத்த வரை மதம் இங்கு என்றோ விழுந்திருக்கும் ஆனால் அது ஆபத்தானது என்று தெரியாமல் பார்பனர்கள் அடுத்து அடுத்து வரும் சாதிகள் அதை தாங்கி கொண்டு இருக்கிறார்கள் அதனின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமா விழும் அதை தாங்கி பிடிபவர்கள் உணர்ந்துவிட்டால் மதம் இங்கு மக்கி மண்ணாக போகும் எங்கள் தமிழ்  மக்கள் அன்று நிம்மதியா இருப்பார்கள்

நமது  எல்லை தெய்வங்களை கருவகாட்டில் போட்டுவிட்டு பெருமாளையும் ,ராமரையும் ,கிருஷ்ணனையும் ,சுமக்க வைத்து , எங்கள் மாமனிதர்களை எல்லாம் மண்டியிட வைத்து நீ சிம்மாசனத்திலும் ,பல்லக்கிலும் எங்கள்  பிள்ளைகள் பல்லக்கை  தூக்க நீ நிம்மதியாய் ஆண்டவுனுக்கு விசிறிவிடுவது போல உனக்கும் மயில் தோகையால் விசிறிகொண்டு வேர்வை இல்லாமல் தெய்வம் என்ற பெயரில் உல்லாச உற்சவம் அடைகிறிர்கள் அதற்கு தமிழ் மக்கள் பலிகடா ,

எல்லா மத வெறி பிடித்த சில பார்பணனும் இஸ்லாம மத மனிதர்களை பல விமர்சனம் செய்வார்கள் அப்புறம் டெல்லி அமெரிக்க பெங்களூர் இப்படி புலம்பெயர்வார்கள் அப்படி புலம் பெயரும் போது யாரை எதிரி என்று தனக்கு கீழ் இருக்கும் சாதிக்கு வகுப்பு எடுத்தானோ அவனை  எதிரா தூண்டி விட்டு இன்று வரை பகைமை உணர்வோடு வாழ வைத்தானோ , அந்த முஸ்லிம் மக்களுக்குத்தான் தனது வீட்டை விற்றுருபான் அவர் அவர் ஊரில் இருக்கும் அக்ரஹாரத்தை பார்த்தால் தற்போது அங்கு குடிருக்கும் மக்கள் முக்கால் வாசி முஸ்லிம் மக்கள் இவர்களது எண்ணம் என்ன இவர்களை தவிர மற்றவன் எல்லாரும் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேற என்ன இருக்க முடியும் . எதனால் இஸ்லாமிய மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்களிடம் மட்டும்தான் உடனே பணம் கிடைக்கும் நல்ல விலைக்கும் வாங்குவார்கள் இப்படி வாழும் இவர்கள்தான் ஹிந்து மதத்தை தூக்கி நிறுத்த போராடுபவர்கள்.

பகுதி 1 தொடரும்  

Monday, August 26, 2013

பஞ்சமி நிலம்


சோழர்கள் ஆதிக்கம் துவங்கிய காலம் முதல் இந்த தமிழ்ச்சமூகம் சாதீய சமுகமாக சீரழியத் துவங்கியது.சாதி அடுக்கின் மேலிருந்த பார்ப்பனர்கள் சத்ரியர்களின் துணை கொண்டு பெரும்பாலான நிலங்களை கோயில் நிலம்,அரசு நிலம் என்ற பெயரில் பங்கு போட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தலித்துகளின் நிலங்களையும் பறித்துக் கொண்டு அவர்களை தங்களின் அடிமையாக்கினார்கள்.

தலித் சமூகத்தினரை குத்தகைக்கு பயிரிடக்கூட அனுமதிக்காதது மட்டுமின்றி,அவர்களை தீண்டாமை எனும் கொடிய வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தலித்துகளின் இழிநிலைக்கண்டு மனம் வருந்திய செங்கல்பட்டு கலெக்டர் ட்ரெம்மன் ஏரே என்பவர் 1891-ல் தலித் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்று ஆங்கில அரசாங்கத்துக்கு மனு அனுப்பினார்.அது கிடப்பில் கிடந்த நிலையில் கிறித்துவ பாதிரியார்கள் (இந்து மடாதிபதிகள் அல்ல)இதே கோரிக்கையை ஆங்கிலேய பாராளுமன்றத்தில் முன் வைத்தனர்,கோரிக்கையை ஏற்று தலித் மக்களுக்கு நிலம் வழங்கிடுமாறு 1892-ல் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது,உத்தரவிடப்பட்ட பின்னரும் நீண்ட காலத்துக்கு நிலம் வழங்கப்ப்டவில்லை.

இந்நிலையில் அயோத்திதாசப் பண்டிதரின் இடையறாத முயற்சியால் ஆங்கிலேய அரசு 1927-31 காலகட்டத்தில் 3,34,000 ஏக்கர் நிலத்தினை தலித்துகளுக்கு வழங்கியது.இப்படி வழங்கப்பட்ட நிலங்களே பஞ்சமி நிலங்கள் ஆகும்.

இந்நிலங்களை தலித்துகள் பிறருக்கு விற்கவோ,தானமாகவோ,கிரையமாகவோ,குத்தகைக்கோ கொடுக்க முடியாது அப்படி முறைகேடாக பறித்தாலும் அரசாங்கம் அதை மீட்டு மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விதிகள் தெளிவாக கூறுகின்றன.


ஆனாலும் இந்த நிலம் விஷயத்தில் மட்டும் தீண்டாமையை ஒதுக்கி வைத்து விட்டு பாதிக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களை பிற சாதியினர் அனுபவித்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம்.   
நன்றி
ராஜேஸ் தீனா

Sunday, August 25, 2013

வரலாறு நமக்கு போதை

நண்பர்களே ஜாதியை கையில் பிடித்து திரியும் வருங்கால  வாலிபர்களே பழைய வரலாறை மட்டும் வைத்து கொண்டு நாம் வாழ முடியாது என்பதுதான் உண்மை காலத்தின் கட்டாயம் ,,இதை நாம் முதலில் புரிந்து உணர வேண்டும் வரலாறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் நாம் அந்த வரலாறை  தெரிந்து பெருமை பேசிகொண்டு இருபதனால்  பெரிய மாற்றம் உண்டு பண்ணுவதில்லை அந்த வரலாறை நாம் கருத்தில் கொண்டு ,அதன் அடிபடையில் போராட வேண்டும் அதை விடுத்து வரலாறை மட்டும் பேசி ஒரு பயனும் அல்ல அன்று நம் முப்பாட்டன் செய்த சாதனையை நாம் செய்ய இயலவில்லையே என்று நாம் நொந்து கொண்டு  தலைகுனிந்து வாழ்கிறோம் என்பதுதான் உண்மை அப்படி நம் ஒரு கேடுகட்ட வாழ்கை வாழும் போது நம் முப்பாட்டன் பெருமை பேசுவது நம் இயலாமை மட்டும் அல்ல அவர்கள் பெருமையும் நாம் கெடுக்கிறோம் என்பதுதான் சரி {எடுத்துகாட்டு நல்ல தகப்பனார் தன் தறுதலை மகனை பார்த்து என் மகன் என்று சொல்லி எனது நல்ல பெயரை கெடுக்காத என்று சொல்லும் பல தகப்பனார் போல நம் முப்பாட்டன்கள் இன்று  இருந்தாலும் அவர்கள் இதை தான் சொல்லிருபார்கள்  } அப்படியே என் ஜாதியை விட்டு கொடுக்க முடியாது ஆனால் தமிழ் மொழி , தமிழ் மக்கள் இவர்களுக்காக போராடுவோம் என்று சொல்வது பாம்பு என்னிடம் விஷம் இல்லை என்று சொல்வது போல் ஆகிவிடும் , அப்படியே ஜாதி விடவே மாட்டோம் ஆனால் தமிழ் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடுவோம் என்று சொல்லும் நண்பர்களே , உன் ஜாதியில் 1 கோடி மக்கள் தொகை இருக்கிறார்கள் என்றால் அதில் 60 % மக்களை போராட்டத்தில் ஈடுபட்டால்  நன்றாக இருக்கும் ஒருநாள் அரசியல் அல்லாத சாதிய  மக்கள் சாலைக்கு வந்து போராடுவார்களா  ஒருநாள் தலித் மக்கள் , ஒருநாள் வன்னியர் , ஒருநாள் ,தேவர் , ஒருநாள் பிள்ளை , ஒருநாள் செட்டியார் , இது போன்று பல ஜாதிகள் பல கோடிகளாக இருக்கும் போது ,,,ஒருநாளும் அது நடக்க வில்லை ஒவ்வொரு ஜாதிலும் அடிதட்ட மக்கள் தான் போராடுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் ஒவ்வொரு ஜாதி பணகார வர்க்கம் போராட்டத்தில் ஈடுபட என்ன வழி என்று பாருங்கள் , மேலே சொன்ன அத்தனை ஜாதியும் என்று சிலை உடைக்கும் பழக்கத்தை விடுகிறார்களோ அன்று தமிழ் சமுதாயதிற்கு ஒரு நல் வழி வரும் என்பதை நான் அறிவேன் , ஒரே ஜாதி அதே ஜாதி பற்றி தவறாக பேசினால் அது தவறு இல்லை ,,ஆனால் வேற ஜாதி காரன் வேறு ஜாதி பற்றி பேசக்கூடாது என்று சொன்னால் நாம் இன்றும் தெளிவு அடையவில்லை என்றுதான் நினைக்கவேண்டியுள்ளது ,,,( ப . சிதம்ரம் , நாராயண சாமி ) இவர்கள் தமிழனுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் அது போன்ற சில ஆட்களை நாம் ஒதுக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஜாதி சேர்ந்த நண்பர்களும் ஏற்று கொள்கிறார்கள் , என் ஜாதி சேர்த்தவனை நீ எப்படி ஒதுக்க வேண்டும் என்று சொன்னாய் என்று கேக்க வரும் போது அது தான் தமிழ் தேசியத்தை மண்ணில் போட்டு புதைத்து விடும் அது போன்ற சில நபர்களால் ) குரங்கில் இருந்து நாம் வந்தோம் என்று ஒப்பு கொள்கிறோம் ஆனால் அந்த குரங்கை நாம் என்றாவது ஏற்று கொண்டுவிட்டமா , அப்படி என்றால் இன்று நாம் வசிக்கும் இடம் பல வருடத்திற்கு முன்பு அரசர் வருவதற்கு முன்பு இந்த இடத்தில என் முப்பாட்டன் இருந்தான் என்று சொல்லிக்கொண்டு இன்று காட்டில் வாழும் காட்டு வாசி தோழர்கள் வந்து கேட்டால் நம் விட்டு விட்டு போய்விடுவோம ? நம் வரலாறை வைத்து கொண்டு இன்று இப்படி பேசிகிறோம் காட்டு வாசிக்கு சரியான வரலாறு இல்லாதனாலும் தோற்று போனதாலும் இன்று நம் வரலாறு சொல்லி பெருமை பட்டு கொள்கிறோம் ,,எப்படியோ நம் மக்கள் ஜாதியை நோக்கி மட்டும் சென்று கொண்டு இருகிறாக்கள் என்று நினைக்கும் போது ,,வேதனையில் வெந்து போகவேண்டியுள்ளது  பிழை இருக்கும் பிழையோடு படித்தால் பிழை ஆகிவிடும்

Friday, August 23, 2013

என்னால் முடிந்த அளவு போராட்டத்தில் கலந்து இருக்குறேன் அது மீனவன் பிரச்சனையிலிருந்து அனு உலை மற்றும் சாதிய அடக்குமுறை  மற்றும்  ”ஈழத்திர்காகவும் முல்லை பெரியார் மற்றும் பரமகுடியில்  நடந்த  காவலரின் துப்பாக்கி சூடு , பெண்களின் வன்கொடுமைக்கு எதிரான போராட்டம் ,மூவர் தூக்குக்கு எதிராக போராட்டம் முதல். வை கோ ,சீமான் பொதுகூட்டம் முதல் கலந்து இருக்கிறேன் என்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் பிறந்தோம் சாப்பிட்டோம் தூங்கினோம் என்று இல்லாமல் எதாவது முடிந்ததை செய்வோம் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டேன் இனி கலந்து கொள்வேன் ,,இதிலே எனக்கு உடம்பு சிலிர்த்த ஒரு நிகழ்வை இங்கு சொல்லவேண்டும்  மூன்று அண்ணன்களின் தூக்கை  எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மிக பெரிய வாகன பேரணியாக வேலூரை நோக்கி சென்றோம் சிறை சாலை முன் பறை முழங்க தோழர்களின் கோசம் வானை பிளக்க ஒரு மிக பெரிய போராட்டம் வேலுரை உலுக்கியது என்  உடலும் என்னை அறியாமல் சிலிர்த்தது நான் சிறைசாலை மெயின் கதவின் ஓரமா நின்று கொண்டு இருந்தேன் 25 வயது இருக்கும் ஒரு காவலன் என் கையை பிடித்து அண்ணா அறிவு அண்ணனை எப்படியாது காப்பாத்திடுங்க இந்த காவலர் உடை போடவில்லை என்றால் நானும் உங்களை போல் போராடிருபேன் மூன்று அண்ணன்களை எப்படியாவது காப்பற்றி விடுங்கள் என்று மீண்டும் சொல்லிவிட்டு அவர் பணியை பார்த்து கொண்டுருந்தார் அதுவரை எனக்கு அண்ணன் பேரறிவாளனை பார்க்க வேண்டும் எண்ணம் எனக்கு பெரிதாக இல்லை அந்த காவலன் அப்படி சொன்னவுடன் எனக்கு எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது ,,சில தோழர்களுக்கு மட்டும் மூவரை பார்க்க அனுமதி கிடைத்தது அவர்கள் மட்டும் சிறைக்கு உள்ளே சென்றார்கள் , அவர்கள் சென்ற 20 வது நிமிடம் அந்த காவலனிடம் பேசி முதல் கேட் தாண்டி உள்ளே சென்றுவிட்டேன் முதல் கேட்டை தாண்டிய பிறகு 50 மீட்டர் தாண்டி இரண்டாவது கேட்  அங்கு அனுமதி சொல்லி  வந்தது  போல் இங்கு  செல்ல முடியாது ஏற்கனவே போன தோழர்களுக்கு மட்டும்தான் அனுமதி நானும் அருண் குமாரும் இரண்டாவது கேட் சிறு ஓட்டை வழியாவது அண்ணனை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையால்  அசையாமல் நின்றோம் நம் தோழர்கள் அண்ணன்களை பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள் அவர்கள் வரும் போது வெளி கதவை  காவலர்கள் திறந்தார்கள் அப்போது உள்ளே போன தோழர்கள் அண்ணன்களுக்கு விடைகொடுத்து கிளம்பினார்கள் அப்போது எங்களால் அண்ணன் பார்க்க நேரிட்டது அப்போது அண்ணனுக்கு கை காமித்து அண்ணா கவலை படாதிங்க நாங்கலாம் இருக்கோம் என்று கத்தினோம் சிறை கதவு அடைக்கப்பட்டது சிறையில் இருந்து வெளியே வந்த தோழர் திருமுருகன் முகம் சந்தோஷத்தில் காணப்பட்டது என்ன திரு எப்படி இருக்கார் என்று என்ன சொன்னார் என்று கேட்டேன். வாயிப்பே இல்ல கெளதம் அறிவு அண்ணன் நமக்கு தைரியம் சொல்றார் என்று திரு சொன்னார். சொன்னவுடன் சாவை எதிர்நோக்கி இருக்கும் நம் அண்ணன் எவ்ளோ தைரியம் நமக்கு கொடுத்திருக்கிறார் என்று நினைத்து பார்க்கும் போது அவர் மீது பாசமும் மரியாதையும் எனக்கு அதிகமானது ,பின்பு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டோம் எனக்கு உடல் கொஞ்சம் சரியில்லை அதனால் எனது பைக்கை ஹரிஹரனிடம்  கொடுத்துவிட்டு  நான் சூரிய பிரகாஷ்  பிரியா தம்பி இன்னொருவர் பெயர் நினைவில்லை சூர்யா காரில் சென்னைக்கு வந்தோம் எதையோ வென்று விட்ட சந்தோஷத்தில் வேலூரிலிருந்து சென்னை வரும் வரை அவளோ அரட்டை அடித்துக்கொண்டு வந்தோம் பிரியா தம்பி எனக்கு  பழக்கம் இல்லாததால் சரியா அவரிடம்  பேசவில்லை அவரும் யாரிடமும் பேசவில்லை . எப்படியாவது அண்ணனை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வீடு வந்து சேர்ந்தேன் சில நாட்கள் கழித்து மே 17 தோழர்கள் நாங்கள் மட்டும் வேலுரை நோக்கி சென்றோம் அண்ணன்களை பார்க்க அனுமதி வாங்கும் இடத்திற்கு  போனோம் அந்த விண்ணப்பம் கொடுக்கும் நபர் புலிகளை பார்க்க சென்னையில் இருந்து வந்துருகிறார்கள் என்று அவரும் அவர் அலுவலக ஊழியரிடம் பேசிக்கொண்டே விண்ணபத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர் ,அந்த நேரம் பார்த்து ஆங்கில ஊடகம் ஒன்று அங்கு கழுகு போல் வீடியோ கேமரா வைத்துகொண்டு சுத்தினார்கள் நல்ல எண்ணத்தில் அல்ல எப்படியாவது ஊடகத்தில் வழக்கம் போல் தமிழர்களுக்கு எதிராக தூக்கை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பால் அங்கு வட்டமிட்டார்கள். நாங்கள்  அவர்களை பார்த்து என்ன விசயமா இங்கு வந்தீர்கள் என்று கேட்டோம்.அவர்கள் சொன்னார்கள் ராஜீவ் கொலை குற்றவாளிகளை பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன், நாங்கள் எல்லாரும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றோம் அப்போது எங்கள் குரல் கேட்டு அனுமதி கொடுக்கும் நபர்கள் இந்த மீடியா ஒருவாரமா இங்கதான் சுத்துறாங்க நாங்க எவளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க மீடியாவுக்கு உள்ளே அனுமதி இல்லை கிளம்புங்க என்று சொன்னார்கள் ,நாங்கள் எல்லாரும் அவர்களை விடமால் கேள்விகளை கேட்டு அங்கிருந்து அப்புறபடுத்த பார்த்தோம் (கெட்டவர்களை அப்படி செய்வது பிழை இல்லை ) ஒரு கட்டத்தில் அங்கு அண்ணனை பார்க்க வந்த உள்ளூர் நாம் தமிழர் தோழர் நாங்கள் மீடியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது உங்களுக்கு ஒருமுறை  சொன்னா கேக்கமாட்டிங்க போறிங்களா இல்லை கேமராவை பிடுங்கவா என்று கேட்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வேகமா வந்தார் கேமராவுக்கு கண்டிப்பா ஆபத்து என்று உணந்தவுடன் அங்கிருந்து இன்னோவா காரில் புகையா கிளம்பினார்கள் ,,5 மணி வரைதான்  சிறையில் இருபவர்களை காண்பதற்கு அனுமதி காலையில் வந்த நாங்கள் அனுமதி சீட்டை வாங்கி கால் கடுக்க காத்து இருக்கிறோம் இப்ப கூப்பிடுவாங்க இப்ப கூப்பிடுவாங்க என்று மணியை பார்த்துகொண்டு காத்து கிடந்தோம் ஒரு கட்டத்தில் தலைமை காவலரை கேட்டு விட்டோம் கொஞ்சம் பொருங்க இன்னொரு அதிகாரி வந்தவுடன் பார்க்கலாம் என்று சொன்னார்கள் எங்களால் ஊகிக்க முடிந்தது எங்களை சுற்றி உளவுத்துறை நின்று கொண்டு அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாமல் காய் விற்பவர்கள் போல ஊர் கதை உலக கதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள் எங்களுக்கு புரிந்து விட்டது இவர்கள் சொல்லித்தான் நம்மை பார்க்க விடாமல் நேரத்தை கடத்தி எங்களை அனப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று ஒண்ணுமே தெரியாத போல நின்றார்கள் 5 மணி ஆனது நாங்கள் நினைத்தது போல நேரம் கடந்து விட்டது நாளை வாருங்கள் என்று சொன்னார்கள் நாங்கள் கடுப்பாகி விவாதம் பண்ண ஆரம்பித்துவிட்டோம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்கள் நாங்களும் அண்ணனை பார்க்காமல் இங்கு இருந்து நகர மாட்டோம் என்று சொல்லி அங்கேயே நின்றோம் கதவை அடைத்து கொண்டு எல்லாரும் உள்ளே சென்று விட்டார்கள் உடனே  திருமுருகன் சாலை மறியல் செய்வோம் அனுமதி சீட்டு கொடுத்துவிட்டு எப்படி அனுமதி மறுத்தால் நாம் விட வேண்டாம் கண்டிப்பா சாலை மறியல் செய்வோம் என்று சொன்னவுடன் யாரும் மறுக்க வில்லை உடனே  ஒப்புக்கொண்டு சாலைக்கு வந்து நடு ரோட்டில் அமர்ந்து கோசம் போட்டோம் சிறையில் இருந்து வெளியே வந்த காவலர்கள் எங்களை அப்புற படுத்த பார்த்தார்கள் நாங்கள் கிளம்ப வில்லை அந்த நேரம் பார்த்து சைலோ  காரில் sp  வந்தார் நீங்கலாம் யாரு எதற்க்காக இப்படி சாலை மறியல் என்ற கேட்டார்  நடந்ததை சொன்னோம்

 தனது மொபைல் போனில் யார்கிட்டையோ பேசினார் அனுமதி சீட்டை பார்த்தார் அவங்கதான் காலையிலே அனுமதி வாங்கிவிட்டர்களே உள்ள அனுமதிக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டு நீங்கள் உள்ளே சென்று பாருங்கள் என்று சொன்னார் நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவித்து உள்ளே அண்ணனை காண சென்றோம் எங்களது எல்லா உடமைகளையும் வாங்கி வைத்துகொண்டு உள்ளே அனுமதித்தார்கள் தலைமை காவலர் அவரை சுற்றி காலி நாற்காலியில் அமர்ந்தோம் அண்ணன் வந்தார் வெள்ளை கலர் டி ஷர்ட் நீல கலர் பேன்ட்  மேல் பாக்கெட்டில் பேனா கிளின் ஷேவ் ,சினிமாவில் வரும் கலெக்டர் போல இருந்தார் ,அண்ணனை கட்டி பிடித்து கைகுலுக்கி அந்த நிமிடம் என்னை சிலிர்க்க வைத்தது எனக்கே இப்படி இருக்குனா என் அண்ணனை பெற்ற தாயிக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்தேன் மறக்க முடியாத நாள் அது ,,,

Thursday, August 22, 2013

சென்னையில் பல நாட்கள் முதல் பாகம்

பத்தவாது படிக்கும் போது அவர்கள் தொடுக்கும் சராசரி கேள்விகளுக்கு பதில் கொடுக்க விருப்பம் இல்லாமல் தேர்வில் தோற்றேன் (மீசையில மண்ணு ஒட்டுல ) இங்கு இன்னு ஒன்றும் சொல்ல வேண்டும் எவளோ அட்டுழியம் நான் பண்ணினாலும் என்னை வாத்தியார்கள் கண்டிக்காமல் ரொம்ப திறமையானவன் உனது திறமைய பயன்படுத்தினா நீதான் இந்த முதல் மாணவன்  நீ ஒழுங்கா இருடா இல்லைனா  பிற்காலத்தில் கஷ்ட்ட படுவ என்று அக்கறையாக என்னிடம் பேசுவார்கள்  சரி அடுத்து தேர்வில் வெற்றியை பறிப்போம் அதுவரை சொந்த ஊரில் இருந்தால் காவேரி குளியல் ,மாலை பொட்டலம் என்னும் பக்கோடா , பாய் கடையில் சிகரெட் , எங்களுக்கு முன்பால் எந்த பையனும் பெண்ணும் காதலிக்க முடியாது, நண்பன் std பூத்தில் அரட்டை ,இடிப்பில் சைக்கில் ஜெயின் ,பர்சில் குத்து கட்டை ,திமிர் பிடித்தவன் என்கிற பட்டம் ,ஊரில் அடிதடி , கபடி ஆட்டம் , கிரிகெட்டுக்கு தலைமை (சரியா விளையாட மாட்டேன் ஆனா தலைமை ) திரையரங்கு கலாட்டா இப்படி அழகா பொடலங்க பெருமையில் ஓடி கொண்டு இருந்தேன் , சரி தேர்வு வரும் வரை அண்ணன் வந்து சென்னைக்கு அழைத்து சென்றார் , விடியகாலை 5 மணிக்கு சைதாபேட்டையில் பஸ் நின்றது நாங்களும் இறங்கினோம் காலை தரையில் வைபத்ருக்குள் சார் எங்க சார் போகணும் ஆட்டோ காரர்கள் நம்மை ஒரு அடிஎடுத்து வைக்காமல் பின் தொடர்ந்தார்கள் 25 ரூபாய் பேசி எங்கள் அண்ணன் தங்கும் ரூம்க்கு சென்றோம் வாழ்கையில் ஆட்டோகாரர்கள் நம்ம ஊரிலும் உண்டு கூப்பிட்டா கூட வரமாட்டனுங்க இங்கு வந்தவுடன் வித்தியாசத்தை கண்டேன் அதுமட்டும் அல்லாமல் எப்படி கூச்சம் இல்லாமல் பேசுகிறார்கள் என்றும் வியந்தேன் .ரூம் முதல் மாடி ஒரு வரண்டா அதை தாண்டி ஹால் சமையல் அரை பாத்ரூம் பார்த்தவுடன் பக்கு என்றது அய்யயோ நான் வெளியில் போயி சிகரெட் அடித்து வந்தால் சமயா அண்ணனிடம் மாட்டுவோமே அந்த ரூமை பார்த்தவுடன் அந்த எண்ணம்தான் முதலில் தோன்றியது இரண்டு நாட்கள் இப்படியே கடந்தது ,இரண்டு நாள் விட்டு நாளைக்கு கிளம்பு (10 வது படிப்தற்கு ) டூசன்ல சேத்து விடுறேன் மறுநாள் கிளம்பி டிவிஎஸ் சாம்ப் வண்டியில் இருவரும் சென்றோம் அந்த டுசன் சென்டர் சைதாபேட் மார்க்கெட் தாண்டி நிறைய  கடைகளின்  மத்தியில் இருந்தது என்னாட இது டுசன் வேறையா என்ற கடுப்பில் போனேன் அவசியம் இல்லாமல் கடுப்பை நம் மனதில் எற்றிவிட்டோமே என்பது டூசன் வரண்டாவில் உட்கார்ந்து வகுப்பு அறையில் எட்டி பார்க்கும் போதுதான் எனக்கு தெரிந்தது பப்பா என்ன பொண்ணுங்க ,,சம ஜாலியா ஆயிட்டேன் இருந்தாலும் மூஞ்சில் சோகத்தை வைத்துக்கொண்டேன் ,,அதை டூஷன் என்று சொன்னால் என்னை மன்னிக்க மாட்டார்கள் அதன் பெயர் ஜீனியஸ் காலேஜ் என்று பலகையில் எழுதி இருந்தது ஒன்று இரண்டு நாள் புதிய இடம் போல சென்றது , எனது புத்தகத்திற்கு கண்ணதாசன் படமும் ,நடிகர் சிவாஜி படமும் அட்டை படமா போட்டுருந்தேன் ரெண்டு அட்டை படத்தையும் கிழித்து டீசண்டா இருக்க கத்துக்கோ இப்படி சொன்னவுடன் எல்லா பெண்களும் ஒரே சிரிப்பு இருவரும் நான் நேசித்த பிரம்பலங்கள் ச்சா இப்படி கிழிச்சிடாணே என்கிற கடுப்பு ஒருபக்கம் இருந்தாலும் அந்த பெண்களின் சிரிப்பு என்னை கவர்ந்தது அப்பாட இது ஒன்னு போதும் எல்லா பெண்களையும் friend பிடிக்க அப்படியே மூஞ்சை டெரரா வைத்துகொண்டு பெண்களை கொலை வெறி பார்வையில் பார்ப்பது போல நடித்தேன் பய புள்ளைங்க கப் சிப் இப்படி ஆயிடாளுங்க அந்த வாத்தியார் போன பிறகு நான் எதையோ இழந்தது போல சன்னல் ஓரம் தனியா நின்றேன் ஒரு பெண் பேப்பரில் சாரி என்று எழுதி கிட்ட வந்து காமித்தது  மற்ற பெண்களும் அதே பேப்பரை என்னிடம் காமித்தார்கள் இரண்டு வாரம் கழித்து அந்த ஜீனியஸ் காலேஜிக்கு நான்தான் ஹீரோ
,,தொடரும்

இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது. சென்னைக்கும் சென்னை பூர்வீக மக்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் 

Wednesday, August 21, 2013

பிழையா போன தமிழ் பிழையர்கள்

நம் மீது அதிகம் பிழை உண்டு எல்லா நாட்டுலையும் எல்லா மாநிலத்திலும் பறந்து வாழும் நம் தமிழ் சொந்தங்கள் தமிழன் மற்றும் விடுதலை புலிகள் பற்றி புரிதலையும் மனிதாபிமான மனிதர்கள் என்பதையும் மற்ற மொழிக்கார மக்களுக்கு நாம் சரியாக எடுத்து சொல்லவில்லை அதுமட்டும் அல்லாமல் இயக்கங்களோ அரசியல் தலைவர்களோ அல்லது தனி மனித செயல்பாடுகளோ இல்லை இதனால் நாம் இழப்பதும் இழக்கப் போவதும் அதிகம் .முக புத்தகத்தில் மட்டும் பல மொழி தெரிந்தவர்களும் தமிழ் மற்றும் தமிழன்னையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்து பதிவு இடுகிறார்கள் ,தமிழ் மொழி தெரிந்தவன் மட்டும் தமிழர்களிடம் பேசிகொண்டு இருங்கள் ,மற்ற மொழி தெரிந்த தமிழர்கள் முக புத்தக வேற்று மொழி தளங்களில் சென்று வேற்று மொழி நட்புகளை அதிகபடுத்தி நமது தரப்பு வாதங்களை வையுங்கள் வேற்று மொழி தெரிந்த தமிழ் நண்பரகளே நீங்கள் இடும் தமிழ் பதிவுகள் வெறும் லைக்கோடு முடிந்துவிடும் உங்களுக்கான பணிகளை பிரித்துகொள்ளுங்கள் ஹிந்தி , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு இப்படி பிரிந்து சென்று வேற்று தளங்களை நமக்கு ஆதரவாகவும் நம்மின் நியாத்தையும் அங்கே புரிய வையுங்கள் , இது ஒன்றும் கடினமான காரியம் இல்லை இந்த வேலைக்கு எந்த விதமான உதவிகளும் நமக்கு தேவை இல்லை . நம் முகத்தை நாம் பார்த்து கொண்டது போதும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் புரிந்துகொண்டு செயல்படுங்கள் .

தமிழ் குருடன்

தோழர்களுக்கு வணக்கம் இன்றுலிருந்து நான் எனது தமிழ் குருடன் என்ற பக்கத்தில் எழுதலாம் என்று இந்த கணக்கை தொடங்கி உள்ளேன் எனது எழுத்து பிழைகள் எனக்கே தெரியும் இருந்தாலும் எழுத எழுத சரிசெய்து விடுவேன் என்ற நம்பிக்கையில் எழுதிகொண்டுதான் இருக்கிறேன் இந்த எழத்து என்பது சாதி மதம் காதல் காமம் மட்டும் அல்லாமல் எனது முகபுத்தக பதிவுகளையும் இங்கு பதிவேன் என்னால் மிக பெரிய கட்டுரைகள் எழுத முடியாது அது எனக்கு விருப்பமும் இல்லை நான்கு வரிகளில் நமது கோபம் ஆசை துக்கம் எல்லாத்தையும் நடைமுறை வாழ்க்கை முறையில்  பேச்சி வழக்கில் எழுதிக்கொண்டு இருக்குறேன் இங்கையும் அதே நடையைத்தான் தொடர போகிறேன் எனக்கு தடையாய் இல்லாமல் படிகல்லாய் இருந்து பாதை அமைத்து தாருங்கள் வணக்கம்

இப்படிக்கு

தமிழ் குருடன்