Wednesday, August 21, 2013

பிழையா போன தமிழ் பிழையர்கள்

நம் மீது அதிகம் பிழை உண்டு எல்லா நாட்டுலையும் எல்லா மாநிலத்திலும் பறந்து வாழும் நம் தமிழ் சொந்தங்கள் தமிழன் மற்றும் விடுதலை புலிகள் பற்றி புரிதலையும் மனிதாபிமான மனிதர்கள் என்பதையும் மற்ற மொழிக்கார மக்களுக்கு நாம் சரியாக எடுத்து சொல்லவில்லை அதுமட்டும் அல்லாமல் இயக்கங்களோ அரசியல் தலைவர்களோ அல்லது தனி மனித செயல்பாடுகளோ இல்லை இதனால் நாம் இழப்பதும் இழக்கப் போவதும் அதிகம் .முக புத்தகத்தில் மட்டும் பல மொழி தெரிந்தவர்களும் தமிழ் மற்றும் தமிழன்னையும் மட்டுமே சுற்றி சுற்றி வந்து பதிவு இடுகிறார்கள் ,தமிழ் மொழி தெரிந்தவன் மட்டும் தமிழர்களிடம் பேசிகொண்டு இருங்கள் ,மற்ற மொழி தெரிந்த தமிழர்கள் முக புத்தக வேற்று மொழி தளங்களில் சென்று வேற்று மொழி நட்புகளை அதிகபடுத்தி நமது தரப்பு வாதங்களை வையுங்கள் வேற்று மொழி தெரிந்த தமிழ் நண்பரகளே நீங்கள் இடும் தமிழ் பதிவுகள் வெறும் லைக்கோடு முடிந்துவிடும் உங்களுக்கான பணிகளை பிரித்துகொள்ளுங்கள் ஹிந்தி , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு இப்படி பிரிந்து சென்று வேற்று தளங்களை நமக்கு ஆதரவாகவும் நம்மின் நியாத்தையும் அங்கே புரிய வையுங்கள் , இது ஒன்றும் கடினமான காரியம் இல்லை இந்த வேலைக்கு எந்த விதமான உதவிகளும் நமக்கு தேவை இல்லை . நம் முகத்தை நாம் பார்த்து கொண்டது போதும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் புரிந்துகொண்டு செயல்படுங்கள் .

No comments:

Post a Comment