Thursday, August 22, 2013

சென்னையில் பல நாட்கள் முதல் பாகம்

பத்தவாது படிக்கும் போது அவர்கள் தொடுக்கும் சராசரி கேள்விகளுக்கு பதில் கொடுக்க விருப்பம் இல்லாமல் தேர்வில் தோற்றேன் (மீசையில மண்ணு ஒட்டுல ) இங்கு இன்னு ஒன்றும் சொல்ல வேண்டும் எவளோ அட்டுழியம் நான் பண்ணினாலும் என்னை வாத்தியார்கள் கண்டிக்காமல் ரொம்ப திறமையானவன் உனது திறமைய பயன்படுத்தினா நீதான் இந்த முதல் மாணவன்  நீ ஒழுங்கா இருடா இல்லைனா  பிற்காலத்தில் கஷ்ட்ட படுவ என்று அக்கறையாக என்னிடம் பேசுவார்கள்  சரி அடுத்து தேர்வில் வெற்றியை பறிப்போம் அதுவரை சொந்த ஊரில் இருந்தால் காவேரி குளியல் ,மாலை பொட்டலம் என்னும் பக்கோடா , பாய் கடையில் சிகரெட் , எங்களுக்கு முன்பால் எந்த பையனும் பெண்ணும் காதலிக்க முடியாது, நண்பன் std பூத்தில் அரட்டை ,இடிப்பில் சைக்கில் ஜெயின் ,பர்சில் குத்து கட்டை ,திமிர் பிடித்தவன் என்கிற பட்டம் ,ஊரில் அடிதடி , கபடி ஆட்டம் , கிரிகெட்டுக்கு தலைமை (சரியா விளையாட மாட்டேன் ஆனா தலைமை ) திரையரங்கு கலாட்டா இப்படி அழகா பொடலங்க பெருமையில் ஓடி கொண்டு இருந்தேன் , சரி தேர்வு வரும் வரை அண்ணன் வந்து சென்னைக்கு அழைத்து சென்றார் , விடியகாலை 5 மணிக்கு சைதாபேட்டையில் பஸ் நின்றது நாங்களும் இறங்கினோம் காலை தரையில் வைபத்ருக்குள் சார் எங்க சார் போகணும் ஆட்டோ காரர்கள் நம்மை ஒரு அடிஎடுத்து வைக்காமல் பின் தொடர்ந்தார்கள் 25 ரூபாய் பேசி எங்கள் அண்ணன் தங்கும் ரூம்க்கு சென்றோம் வாழ்கையில் ஆட்டோகாரர்கள் நம்ம ஊரிலும் உண்டு கூப்பிட்டா கூட வரமாட்டனுங்க இங்கு வந்தவுடன் வித்தியாசத்தை கண்டேன் அதுமட்டும் அல்லாமல் எப்படி கூச்சம் இல்லாமல் பேசுகிறார்கள் என்றும் வியந்தேன் .ரூம் முதல் மாடி ஒரு வரண்டா அதை தாண்டி ஹால் சமையல் அரை பாத்ரூம் பார்த்தவுடன் பக்கு என்றது அய்யயோ நான் வெளியில் போயி சிகரெட் அடித்து வந்தால் சமயா அண்ணனிடம் மாட்டுவோமே அந்த ரூமை பார்த்தவுடன் அந்த எண்ணம்தான் முதலில் தோன்றியது இரண்டு நாட்கள் இப்படியே கடந்தது ,இரண்டு நாள் விட்டு நாளைக்கு கிளம்பு (10 வது படிப்தற்கு ) டூசன்ல சேத்து விடுறேன் மறுநாள் கிளம்பி டிவிஎஸ் சாம்ப் வண்டியில் இருவரும் சென்றோம் அந்த டுசன் சென்டர் சைதாபேட் மார்க்கெட் தாண்டி நிறைய  கடைகளின்  மத்தியில் இருந்தது என்னாட இது டுசன் வேறையா என்ற கடுப்பில் போனேன் அவசியம் இல்லாமல் கடுப்பை நம் மனதில் எற்றிவிட்டோமே என்பது டூசன் வரண்டாவில் உட்கார்ந்து வகுப்பு அறையில் எட்டி பார்க்கும் போதுதான் எனக்கு தெரிந்தது பப்பா என்ன பொண்ணுங்க ,,சம ஜாலியா ஆயிட்டேன் இருந்தாலும் மூஞ்சில் சோகத்தை வைத்துக்கொண்டேன் ,,அதை டூஷன் என்று சொன்னால் என்னை மன்னிக்க மாட்டார்கள் அதன் பெயர் ஜீனியஸ் காலேஜ் என்று பலகையில் எழுதி இருந்தது ஒன்று இரண்டு நாள் புதிய இடம் போல சென்றது , எனது புத்தகத்திற்கு கண்ணதாசன் படமும் ,நடிகர் சிவாஜி படமும் அட்டை படமா போட்டுருந்தேன் ரெண்டு அட்டை படத்தையும் கிழித்து டீசண்டா இருக்க கத்துக்கோ இப்படி சொன்னவுடன் எல்லா பெண்களும் ஒரே சிரிப்பு இருவரும் நான் நேசித்த பிரம்பலங்கள் ச்சா இப்படி கிழிச்சிடாணே என்கிற கடுப்பு ஒருபக்கம் இருந்தாலும் அந்த பெண்களின் சிரிப்பு என்னை கவர்ந்தது அப்பாட இது ஒன்னு போதும் எல்லா பெண்களையும் friend பிடிக்க அப்படியே மூஞ்சை டெரரா வைத்துகொண்டு பெண்களை கொலை வெறி பார்வையில் பார்ப்பது போல நடித்தேன் பய புள்ளைங்க கப் சிப் இப்படி ஆயிடாளுங்க அந்த வாத்தியார் போன பிறகு நான் எதையோ இழந்தது போல சன்னல் ஓரம் தனியா நின்றேன் ஒரு பெண் பேப்பரில் சாரி என்று எழுதி கிட்ட வந்து காமித்தது  மற்ற பெண்களும் அதே பேப்பரை என்னிடம் காமித்தார்கள் இரண்டு வாரம் கழித்து அந்த ஜீனியஸ் காலேஜிக்கு நான்தான் ஹீரோ
,,தொடரும்

இன்று சென்னை தினம். சென்னை உருவாகி 374 ஆண்டுகள் முடிவடைகிறது. சென்னைக்கும் சென்னை பூர்வீக மக்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் 

No comments:

Post a Comment