Wednesday, August 28, 2013

ஹிந்து மதமும் நாங்களும்

தலைப்பை பார்த்தவுடன் இதிகாசமும் வரலாறும் ஆராயிந்து எழுதுதியது என்று யாரும் நினைத்தால் நான் பொறுப்பு அல்ல நடைமுறை மனித எண்ணத்தில் இருக்கும் நடைமுறையை தனிப்பட்ட முறையுலும் சமுக வலைதளங்களில் நடக்கும் சண்டைகளையும் வைத்து என்னால் முடிந்ததை எழுதுகிறேன்

நான் திருடன் இல்லை அதில் என் பெயரை சேர்த்துவிட்டார்கள் என்று ஒரு நிரபாரதி அவனுக்கும் அந்த திருட்டும்கும் சம்பந்தம் இல்லை எவ்வாறு பழி வாங்கினார்கள் என்பதை குற்றதை சுமந்தவன் தான் அந்த நிகழ்வை பற்றி பேசமுடியும் அதற்காக போராட முடியும் அதை அதான் நாங்கள் இன்று செய்துகொண்டு இருக்கிறோம்  நாங்கள் ஹிந்து இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம் அதனாலே ஹிந்துவை  அதிகமா விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது அதை பார்த்துதான் ஹிந்து வெறியர்கள் (அவர்கள் வெறியர்களும் அல்ல ஆரியனின் அடிமைகள் என்றுதான் சொல்ல வேண்டும் ) நம்மை பார்த்து வழக்கமான கேள்வியை வைக்கிறார்கள் எங்கே இஸ்லாமியரை பார்த்து இப்படி பேசுங்க ,கிருத்துவனை பார்த்து இப்படி கேளுங்க ,,என்று நம் மீது வழக்கமான கேள்விகளை தொடுக்கிறார்கள் (அடுத்த முறையாவது கேள்வியை மாத்துங்க ) இது போன்ற வழக்கமான கேள்விகளை கேட்பவர்களுக்கு ஒன்று சொல்லிகொள்கிறேன் எனது அரசாங்க ஆவணத்தில் இஸ்லாம் என்று இல்லை கிருத்துவன் என்று இல்லைஆனால் ஹிந்து என்று திணிக்க பட்டுள்ளது அந்த திணிப்பை கிருத்துவனும் இஸ்லாமியனும் செய்திருந்தாலும் இன்றைய ஹிந்துவை எப்படி விமர்சனம் செய்கிறமோ அதே தான் மற்ற மதத்திற்கும் செய்திருப்போம் (இருந்தாலும் மற்ற மதத்தில் இருக்கும்தவறுக்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்துகொண்டுதான் இருக்குறோம் அது வேற விசியம் அத விடுங்க )


எப்படி எங்களை தமிழ் மக்களை ஹிந்துவில் கோர்த்து விட்டார்கள் என்று நினைக்கும் போது ஒட்டு மொத்த எரிமலையும் நம் மனதுக்குள் வெடிக்கிறது
யார்லாம் இஸ்லாம் இல்லையோ ,யார்லாம் கிருத்துவன் இல்லையோ ,யார்லாம் பௌத்தன் இல்லையோ ,யார்லாம் சீக்கியன் இல்லையோ அவன்லாம் ஹிந்து என்று பொய் பரப்புரையில் மதமே இல்லாத நாங்கள் மதம் என்னும் மாய வலை என்று தெரியாமல் விழுந்தோம் மதம் என்னும் சவக்குழியில் வலுகட்டயமா  தள்ளி விட்டிர்கள் அத சவ குழி என்று  தெரியாமலும் அதற்கு முக்கியத்துவமும் கொடுக்காமல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் எதிர்த்துருபார்கள் எங்கள் முப்பாட்டன்கள் சிந்திக்க வில்லை சிந்திக்கவும் விட வில்லை அது சவ குழி என்று தெரிந்தவன் எழுந்திருக்க முற்பட்டால் அவனை விமர்சனம் என்ற பெயரில் அவன் மீது விஷத்தை கக்குரிர்கள் , மதத்தை வைத்து நீ சாதித்தது என்ன என்று கேட்டால் இது வரை பதில் இல்லை .இந்துவா இருக்குறவன் வேற  மதம் மாறுகிறான் அவனை நினைத்து பெருமை பட வேண்டும் என்று நினைக்கிறேன் ஹிந்து மதத்தில் எப்படி எப்போது நாம் வந்தோம் யாரால் நாம் வந்தோம் என்று கூட தெரியாமல் ஒரு மதத்தில் இருப்பதை விட விவரம் தெரிந்து ஹிந்துமததில் இருக்கும் மூட நம்பிக்கை ,பார்பனனை தவிர வேற ஒருத்தனுக்கும் மரியாதை இல்லாதது போன்ற கொடுமைகளை கண்டு அவனுக்கு பிடித்த மதத்தில் அவன் இணைகிறான் என்றால் அவனை நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும்


ஹிந்து மதத்தில் பார்பனர்கள் அல்லாதவர்களை ஒரு மனிதனா நினைத்ததுண்டா அப்போ அந்த மததிற்கு ஹிந்து என்று பெயரை நீக்கி விட்டு பார்பன மதம் என்று வைத்தால்தான் பொருந்தும் தமிழ்நாட்டை பொறுத்த வரை மதம் இங்கு என்றோ விழுந்திருக்கும் ஆனால் அது ஆபத்தானது என்று தெரியாமல் பார்பனர்கள் அடுத்து அடுத்து வரும் சாதிகள் அதை தாங்கி கொண்டு இருக்கிறார்கள் அதனின் சாராம்சம் கொஞ்சம் கொஞ்சமா விழும் அதை தாங்கி பிடிபவர்கள் உணர்ந்துவிட்டால் மதம் இங்கு மக்கி மண்ணாக போகும் எங்கள் தமிழ்  மக்கள் அன்று நிம்மதியா இருப்பார்கள்

நமது  எல்லை தெய்வங்களை கருவகாட்டில் போட்டுவிட்டு பெருமாளையும் ,ராமரையும் ,கிருஷ்ணனையும் ,சுமக்க வைத்து , எங்கள் மாமனிதர்களை எல்லாம் மண்டியிட வைத்து நீ சிம்மாசனத்திலும் ,பல்லக்கிலும் எங்கள்  பிள்ளைகள் பல்லக்கை  தூக்க நீ நிம்மதியாய் ஆண்டவுனுக்கு விசிறிவிடுவது போல உனக்கும் மயில் தோகையால் விசிறிகொண்டு வேர்வை இல்லாமல் தெய்வம் என்ற பெயரில் உல்லாச உற்சவம் அடைகிறிர்கள் அதற்கு தமிழ் மக்கள் பலிகடா ,

எல்லா மத வெறி பிடித்த சில பார்பணனும் இஸ்லாம மத மனிதர்களை பல விமர்சனம் செய்வார்கள் அப்புறம் டெல்லி அமெரிக்க பெங்களூர் இப்படி புலம்பெயர்வார்கள் அப்படி புலம் பெயரும் போது யாரை எதிரி என்று தனக்கு கீழ் இருக்கும் சாதிக்கு வகுப்பு எடுத்தானோ அவனை  எதிரா தூண்டி விட்டு இன்று வரை பகைமை உணர்வோடு வாழ வைத்தானோ , அந்த முஸ்லிம் மக்களுக்குத்தான் தனது வீட்டை விற்றுருபான் அவர் அவர் ஊரில் இருக்கும் அக்ரஹாரத்தை பார்த்தால் தற்போது அங்கு குடிருக்கும் மக்கள் முக்கால் வாசி முஸ்லிம் மக்கள் இவர்களது எண்ணம் என்ன இவர்களை தவிர மற்றவன் எல்லாரும் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேற என்ன இருக்க முடியும் . எதனால் இஸ்லாமிய மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் என்றால் அவர்களிடம் மட்டும்தான் உடனே பணம் கிடைக்கும் நல்ல விலைக்கும் வாங்குவார்கள் இப்படி வாழும் இவர்கள்தான் ஹிந்து மதத்தை தூக்கி நிறுத்த போராடுபவர்கள்.

பகுதி 1 தொடரும்  

No comments:

Post a Comment