என்னால் முடிந்த அளவு போராட்டத்தில் கலந்து இருக்குறேன் அது மீனவன் பிரச்சனையிலிருந்து அனு உலை மற்றும் சாதிய அடக்குமுறை மற்றும் ”ஈழத்திர்காகவும் முல்லை பெரியார் மற்றும் பரமகுடியில் நடந்த காவலரின் துப்பாக்கி சூடு , பெண்களின் வன்கொடுமைக்கு எதிரான போராட்டம் ,மூவர் தூக்குக்கு எதிராக போராட்டம் முதல். வை கோ ,சீமான் பொதுகூட்டம் முதல் கலந்து இருக்கிறேன் என்னால் முடிந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் பிறந்தோம் சாப்பிட்டோம் தூங்கினோம் என்று இல்லாமல் எதாவது முடிந்ததை செய்வோம் என்ற எண்ணத்தில் கலந்து கொண்டேன் இனி கலந்து கொள்வேன் ,,இதிலே எனக்கு உடம்பு சிலிர்த்த ஒரு நிகழ்வை இங்கு சொல்லவேண்டும் மூன்று அண்ணன்களின் தூக்கை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக மிக பெரிய வாகன பேரணியாக வேலூரை நோக்கி சென்றோம் சிறை சாலை முன் பறை முழங்க தோழர்களின் கோசம் வானை பிளக்க ஒரு மிக பெரிய போராட்டம் வேலுரை உலுக்கியது என் உடலும் என்னை அறியாமல் சிலிர்த்தது நான் சிறைசாலை மெயின் கதவின் ஓரமா நின்று கொண்டு இருந்தேன் 25 வயது இருக்கும் ஒரு காவலன் என் கையை பிடித்து அண்ணா அறிவு அண்ணனை எப்படியாது காப்பாத்திடுங்க இந்த காவலர் உடை போடவில்லை என்றால் நானும் உங்களை போல் போராடிருபேன் மூன்று அண்ணன்களை எப்படியாவது காப்பற்றி விடுங்கள் என்று மீண்டும் சொல்லிவிட்டு அவர் பணியை பார்த்து கொண்டுருந்தார் அதுவரை எனக்கு அண்ணன் பேரறிவாளனை பார்க்க வேண்டும் எண்ணம் எனக்கு பெரிதாக இல்லை அந்த காவலன் அப்படி சொன்னவுடன் எனக்கு எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது ,,சில தோழர்களுக்கு மட்டும் மூவரை பார்க்க அனுமதி கிடைத்தது அவர்கள் மட்டும் சிறைக்கு உள்ளே சென்றார்கள் , அவர்கள் சென்ற 20 வது நிமிடம் அந்த காவலனிடம் பேசி முதல் கேட் தாண்டி உள்ளே சென்றுவிட்டேன் முதல் கேட்டை தாண்டிய பிறகு 50 மீட்டர் தாண்டி இரண்டாவது கேட் அங்கு அனுமதி சொல்லி வந்தது போல் இங்கு செல்ல முடியாது ஏற்கனவே போன தோழர்களுக்கு மட்டும்தான் அனுமதி நானும் அருண் குமாரும் இரண்டாவது கேட் சிறு ஓட்டை வழியாவது அண்ணனை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையால் அசையாமல் நின்றோம் நம் தோழர்கள் அண்ணன்களை பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள் அவர்கள் வரும் போது வெளி கதவை காவலர்கள் திறந்தார்கள் அப்போது உள்ளே போன தோழர்கள் அண்ணன்களுக்கு விடைகொடுத்து கிளம்பினார்கள் அப்போது எங்களால் அண்ணன் பார்க்க நேரிட்டது அப்போது அண்ணனுக்கு கை காமித்து அண்ணா கவலை படாதிங்க நாங்கலாம் இருக்கோம் என்று கத்தினோம் சிறை கதவு அடைக்கப்பட்டது சிறையில் இருந்து வெளியே வந்த தோழர் திருமுருகன் முகம் சந்தோஷத்தில் காணப்பட்டது என்ன திரு எப்படி இருக்கார் என்று என்ன சொன்னார் என்று கேட்டேன். வாயிப்பே இல்ல கெளதம் அறிவு அண்ணன் நமக்கு தைரியம் சொல்றார் என்று திரு சொன்னார். சொன்னவுடன் சாவை எதிர்நோக்கி இருக்கும் நம் அண்ணன் எவ்ளோ தைரியம் நமக்கு கொடுத்திருக்கிறார் என்று நினைத்து பார்க்கும் போது அவர் மீது பாசமும் மரியாதையும் எனக்கு அதிகமானது ,பின்பு அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டோம் எனக்கு உடல் கொஞ்சம் சரியில்லை அதனால் எனது பைக்கை ஹரிஹரனிடம் கொடுத்துவிட்டு நான் சூரிய பிரகாஷ் பிரியா தம்பி இன்னொருவர் பெயர் நினைவில்லை சூர்யா காரில் சென்னைக்கு வந்தோம் எதையோ வென்று விட்ட சந்தோஷத்தில் வேலூரிலிருந்து சென்னை வரும் வரை அவளோ அரட்டை அடித்துக்கொண்டு வந்தோம் பிரியா தம்பி எனக்கு பழக்கம் இல்லாததால் சரியா அவரிடம் பேசவில்லை அவரும் யாரிடமும் பேசவில்லை . எப்படியாவது அண்ணனை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வீடு வந்து சேர்ந்தேன் சில நாட்கள் கழித்து மே 17 தோழர்கள் நாங்கள் மட்டும் வேலுரை நோக்கி சென்றோம் அண்ணன்களை பார்க்க அனுமதி வாங்கும் இடத்திற்கு போனோம் அந்த விண்ணப்பம் கொடுக்கும் நபர் புலிகளை பார்க்க சென்னையில் இருந்து வந்துருகிறார்கள் என்று அவரும் அவர் அலுவலக ஊழியரிடம் பேசிக்கொண்டே விண்ணபத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர் ,அந்த நேரம் பார்த்து ஆங்கில ஊடகம் ஒன்று அங்கு கழுகு போல் வீடியோ கேமரா வைத்துகொண்டு சுத்தினார்கள் நல்ல எண்ணத்தில் அல்ல எப்படியாவது ஊடகத்தில் வழக்கம் போல் தமிழர்களுக்கு எதிராக தூக்கை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பால் அங்கு வட்டமிட்டார்கள். நாங்கள் அவர்களை பார்த்து என்ன விசயமா இங்கு வந்தீர்கள் என்று கேட்டோம்.அவர்கள் சொன்னார்கள் ராஜீவ் கொலை குற்றவாளிகளை பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன், நாங்கள் எல்லாரும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றோம் அப்போது எங்கள் குரல் கேட்டு அனுமதி கொடுக்கும் நபர்கள் இந்த மீடியா ஒருவாரமா இங்கதான் சுத்துறாங்க நாங்க எவளோ சொன்னாலும் கேக்க மாட்றாங்க மீடியாவுக்கு உள்ளே அனுமதி இல்லை கிளம்புங்க என்று சொன்னார்கள் ,நாங்கள் எல்லாரும் அவர்களை விடமால் கேள்விகளை கேட்டு அங்கிருந்து அப்புறபடுத்த பார்த்தோம் (கெட்டவர்களை அப்படி செய்வது பிழை இல்லை ) ஒரு கட்டத்தில் அங்கு அண்ணனை பார்க்க வந்த உள்ளூர் நாம் தமிழர் தோழர் நாங்கள் மீடியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது உங்களுக்கு ஒருமுறை சொன்னா கேக்கமாட்டிங்க போறிங்களா இல்லை கேமராவை பிடுங்கவா என்று கேட்டு அவர்கள் இருக்கும் இடம் நோக்கி வேகமா வந்தார் கேமராவுக்கு கண்டிப்பா ஆபத்து என்று உணந்தவுடன் அங்கிருந்து இன்னோவா காரில் புகையா கிளம்பினார்கள் ,,5 மணி வரைதான் சிறையில் இருபவர்களை காண்பதற்கு அனுமதி காலையில் வந்த நாங்கள் அனுமதி சீட்டை வாங்கி கால் கடுக்க காத்து இருக்கிறோம் இப்ப கூப்பிடுவாங்க இப்ப கூப்பிடுவாங்க என்று மணியை பார்த்துகொண்டு காத்து கிடந்தோம் ஒரு கட்டத்தில் தலைமை காவலரை கேட்டு விட்டோம் கொஞ்சம் பொருங்க இன்னொரு அதிகாரி வந்தவுடன் பார்க்கலாம் என்று சொன்னார்கள் எங்களால் ஊகிக்க முடிந்தது எங்களை சுற்றி உளவுத்துறை நின்று கொண்டு அவர்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாமல் காய் விற்பவர்கள் போல ஊர் கதை உலக கதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள் எங்களுக்கு புரிந்து விட்டது இவர்கள் சொல்லித்தான் நம்மை பார்க்க விடாமல் நேரத்தை கடத்தி எங்களை அனப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று ஒண்ணுமே தெரியாத போல நின்றார்கள் 5 மணி ஆனது நாங்கள் நினைத்தது போல நேரம் கடந்து விட்டது நாளை வாருங்கள் என்று சொன்னார்கள் நாங்கள் கடுப்பாகி விவாதம் பண்ண ஆரம்பித்துவிட்டோம் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார்கள் நாங்களும் அண்ணனை பார்க்காமல் இங்கு இருந்து நகர மாட்டோம் என்று சொல்லி அங்கேயே நின்றோம் கதவை அடைத்து கொண்டு எல்லாரும் உள்ளே சென்று விட்டார்கள் உடனே திருமுருகன் சாலை மறியல் செய்வோம் அனுமதி சீட்டு கொடுத்துவிட்டு எப்படி அனுமதி மறுத்தால் நாம் விட வேண்டாம் கண்டிப்பா சாலை மறியல் செய்வோம் என்று சொன்னவுடன் யாரும் மறுக்க வில்லை உடனே ஒப்புக்கொண்டு சாலைக்கு வந்து நடு ரோட்டில் அமர்ந்து கோசம் போட்டோம் சிறையில் இருந்து வெளியே வந்த காவலர்கள் எங்களை அப்புற படுத்த பார்த்தார்கள் நாங்கள் கிளம்ப வில்லை அந்த நேரம் பார்த்து சைலோ காரில் sp வந்தார் நீங்கலாம் யாரு எதற்க்காக இப்படி சாலை மறியல் என்ற கேட்டார் நடந்ததை சொன்னோம்
தனது மொபைல் போனில் யார்கிட்டையோ பேசினார் அனுமதி சீட்டை பார்த்தார் அவங்கதான் காலையிலே அனுமதி வாங்கிவிட்டர்களே உள்ள அனுமதிக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டு நீங்கள் உள்ளே சென்று பாருங்கள் என்று சொன்னார் நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவித்து உள்ளே அண்ணனை காண சென்றோம் எங்களது எல்லா உடமைகளையும் வாங்கி வைத்துகொண்டு உள்ளே அனுமதித்தார்கள் தலைமை காவலர் அவரை சுற்றி காலி நாற்காலியில் அமர்ந்தோம் அண்ணன் வந்தார் வெள்ளை கலர் டி ஷர்ட் நீல கலர் பேன்ட் மேல் பாக்கெட்டில் பேனா கிளின் ஷேவ் ,சினிமாவில் வரும் கலெக்டர் போல இருந்தார் ,அண்ணனை கட்டி பிடித்து கைகுலுக்கி அந்த நிமிடம் என்னை சிலிர்க்க வைத்தது எனக்கே இப்படி இருக்குனா என் அண்ணனை பெற்ற தாயிக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்தேன் மறக்க முடியாத நாள் அது ,,,
தனது மொபைல் போனில் யார்கிட்டையோ பேசினார் அனுமதி சீட்டை பார்த்தார் அவங்கதான் காலையிலே அனுமதி வாங்கிவிட்டர்களே உள்ள அனுமதிக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டு நீங்கள் உள்ளே சென்று பாருங்கள் என்று சொன்னார் நாங்கள் அவருக்கு நன்றியை தெரிவித்து உள்ளே அண்ணனை காண சென்றோம் எங்களது எல்லா உடமைகளையும் வாங்கி வைத்துகொண்டு உள்ளே அனுமதித்தார்கள் தலைமை காவலர் அவரை சுற்றி காலி நாற்காலியில் அமர்ந்தோம் அண்ணன் வந்தார் வெள்ளை கலர் டி ஷர்ட் நீல கலர் பேன்ட் மேல் பாக்கெட்டில் பேனா கிளின் ஷேவ் ,சினிமாவில் வரும் கலெக்டர் போல இருந்தார் ,அண்ணனை கட்டி பிடித்து கைகுலுக்கி அந்த நிமிடம் என்னை சிலிர்க்க வைத்தது எனக்கே இப்படி இருக்குனா என் அண்ணனை பெற்ற தாயிக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்தேன் மறக்க முடியாத நாள் அது ,,,

No comments:
Post a Comment